சென்னை : இனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி என்ற தலைப்பை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். பெரியவர்களாகிய நாம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க செல்லும் போது நம் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாத தருணத்தில், அவர்களையும் உடன் அழைத்து சென்று பின் காவல்துறையினரிடம் நாம் பேசும் போது நம்மை பேசவிடாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர். மேலும் அவர்கள் மனநிலை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நம் சென்னை பெருநகர காவல்துறையினர், அசத்தல் செயலால் பொதுமக்கள் அசந்து போய் உள்ளனர். சென்னையில்ன முதற்கட்டமாக 35 காவல் நிலையங்களில், செயல்படுத்தியுள்ள கிட்ஸ் ரூம் (KIDS ROOM). இதன் மூலம் குழந்தைகளின் மனநிலை இயல்பாக மாறுவதுடன், உற்சாகம் அடைகின்றனர்.
சென்னை பெருநகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காவல் நிலையங்களுக்கு வர நேரிட்டால் அவர்களுக்கு எவ்வித தயக்கத்தையோ, அச்சத்தையோ ஏற்படுத்தாத வண்ணம் இயல்பான மனநிலையை கொடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்பதற்காக நேற்று (27.10.2020) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் காணொலி காட்சி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் திருமதி.H.ஜெயலட்சுமி, கூடுதல் துணை ஆணையர்(Tmt) s. மெகலினா ஹைடன் (பெண்கள் மற்றும் குழந்தைகள்), முனைவர். தேவசித்தம், International Justice Mission (IJM) மற்றும் H.நாதர்ஷா மாலிம், ஆகியோருடன் இணைந்து சென்னை பெருநகரில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகள் நேய காவல் மையங்களை தொடக்கி வைத்து குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி W.30 மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் K.ஜோதிலட்சுமி அவர்களும் அனைத்து காவலர்களும் நல்ல முறையில் கலந்து சிறப்பித்தார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முகமது மூசா