சென்னை : 24 மணி நேர வேலை, தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் பலர் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீதமான முடிவை எடுக்கும் நிகழ்வுகளும் அண்மைகாலமாக அதிகரித்துவருகிறது இதையடுத்து காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது . கடந்த ஆண்டு விடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றமும் கருத்து தெரிவித்திருந்தது . இந்த நிலையில் தமிழக காவல்துறையினர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னை தவிர அனைத்து மாநகர காவல்துறை ஆணையர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கியோர்களுக்கு பொருந்தும். இதனை அடுத்து இனிமேல் காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை சுழற்சி அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது.