ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை முதல் ஜன.7ஆம் தேதி வரை டிஜிபிக்கள் மற்றும் ஐஜிகளின் 58வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், நாட்டின் பாதுகாப்பில் நிலவும் பிரச்சனைகள், சட்டம்-ஒழுங்கு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.















