திருவள்ளூர்: மீஞ்சூரில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளுக்கான தன்னம்பிக்கை தரும் வழிகாட்டும் நிகழ்ச்சி ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் எழில் திருமண மண்டபத்தில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம் ஏற்பாட்டில் தலைவர் குரு சாலமோன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆபிரகாம் பாலாஜி அனைவரையும் வரவேற்றார். அருள்தாமஸ், தாமஸ் நிஜந்தன், ராம் டேனியல், ஆண்ட்ரூஸ், சிவா, கிதியோன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். டாக்டர் கோவிந்தராஜ், விஸ்டம் பவுண்டேசன் சதிஷ், பிஷப் விமல் ராஜ் சுகுமார் கல்வியாளர்கள் ஜெயக்குமார், இராஜ இராஜேஸ்வரி, மோகன் தானுவேல் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் கல்வி பயிலும் அரசு தேர்வு எழுத தயாராக உள்ள மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு