செங்கல்பட்டு : தமிழ்நாடு காவல்துறை. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழாவினை (1973-2023) பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகிறது. அதன்படி, 2024ஆம் ஆண்டிற்கான விழாவினை ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை துப்பாக்கி சுடும் போட்டியை நடத்த அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய ஆயுதப் படைகளில் உள்ள ஆயுதங்கள் குறித்த மதிப்பிடுதல் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்து வதற்க்கான நோக்கத்துடன் அகில இந்திய காவல்துறை கடமை போட்டியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி (15.06.2024) அன்று துவங்கப்பட்டு (20.06.2024) ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல்துறையினரால் மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் கமாண்டோ பள்ளிபயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், 13 விதமான போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை ரைபிள்பிரிவில் (5 போட்டிகள்) பிஸ்டல் ரிவால்வர் பிரிவில் (4 போட்டிகள்) மற்றும் கார்பைன் ஸ்டென்கன்பிரிவில் (4 போட்டிகள்) என அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும்படைத்தலைவர் சங்கர் ஜிவால் பங்கேற்று துப்பாக்கிச்சூடு போட்டியினை நேரில் பார்வையிட்டார். இந்த துப்பாக்கிச்சுடு வளாகத்தினை சுற்றி மரங்கன்றுகளை நட்டார். இதில் காவல்துறை அமைப்புகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட 454 மகளிர் காவலர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அவர்களுக்கு உதவிட, அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் 176 பேர் பங்கேற்கின்றனர். நேற்றையதினம் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற காவவர்களுக்கு ஷங்கர் ஜியோல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி அவர்களை வெகுவாக பாராட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி தமிழக அரசு காவல்துறை சார்ந்த 9திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் ஒன்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி. இப்போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் போட்டியிட்ட காவலர்கள் 2வெள்ளி மற்றும் 1தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது. காவல்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதனை புரிந்து வருகின்றனர்.
இதைவிட மேலும் மேலும் சாதனை புரியவேண்டும். காவல்துறையில் பெண் காவலர்களின் பங்கு மிகப்பெரியது. அதற்கான முயற்சியை பெண் காவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்