சேலம் : சேலம் மாவட்டம், காமலாபுரம் மோகன் குமார் என்பவர் சர்க்கரை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த வருடம் மகாராஷ்டிராவை சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சர்க்கரை வாங்குவதற்காக 25 டன் சர்க்கரைக்கு 779625/ பணம் அனுப்பியுள்ளார். மேற்படி நிறுவனத்தார் 20 டன் சர்க்கரை மட்டும் அனுப்பியுள்ளனர். எஞ்சியுள்ள 5 டன் சர்க்கரையுடன் சேர்த்து மொத்தம்l 30 டன் சர்க்கரை அனுப்புவதாக கூறி 9,38,230/ பணத்தை பெற்றுக் கொண்டு சர்க்கரையை அனுப்பாமல் மோசடி செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த காரணத்தால் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்