கோவை : கோவையில் பல்வேறு குற்றங்கள், இணைய குற்றங்கள், போன்றவை தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண் அவர்களிடம் கொடுத்த புகாரில் கோவை வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் instagram மூலம் justin என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஒரு நபர் நண்பராக அறிமுகமாகி பேசி பழகி வந்ததாகவும் அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் பேசுவதை நிறுத்தியதாகவும் அதன் பின்னரும் அந்த நபர் இன்ஸ்டாகிராமில் போலியாக ஒரு கணக்கினை உருவாக்கி அதில் ITEM girl Coimbatore என்ற வாசகத்துடன் கூடிய தனது மொபைல் எண்ணை பயன்படுத்தி அதில் தனது மனைவியின் ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டதாகவும் மேலும் தொடர்ந்து தன்னிடம் பேசுமாறு தன்னுடைய மனைவியை வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிகண்டன் (31), நச்சன் குளம் கீழூர் செண்பகராமன் நல்லூர் திருநெல்வேலி மாவட்டம் என்பவரை இன்று (15.02.2023) தேதி மேற்படி வழக்கின் நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்