திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகரையைச் சேர்ந்த சுந்தரவடிவேல் (69), என்பவருக்கு வங்கியிலிருந்து மேனேஜர் பேசுவது போல் பேசி OTP பெற்று ரூ.14,000/- பணத்தை நூதன முறையில் ஏமாற்றியதாக சுந்தரவடிவேல் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் மர்ம நபரின் வங்கி கணக்கை ஆராய்ந்து பார்த்ததில் Freecharge என்ற செயலிக்கு சென்ற ரூ.14,000/- பணத்தை மீட்டனர். இதையடுத்து (13.09.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா, அவர்கள் சுந்தரவடிவேல் அவர்களிடம் ரூ.14,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா