திருவாரூர் : சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (31.10.2025) திருவாரூர் நகர காவல்நிலையம், மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம், திருவாரூர் நியூ பாரத் பள்ளியின் சாரணர் இயக்கம் மாணவர்கள் மற்றும் வடபாதிமங்களம் சோமசுந்தரம் ஆண்கள் உதவி பெரும் மேல்நிலை பள்ளியின் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் இணைந்து பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு குறித்தும், இணையவழி பாதுக்காப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
 
                                











 
			 
		    



