வேலூர்: வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களின் தலைமையில் இன்று 06.02.2023 முதல் 10.02.2023 தேதி வரை பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று 06.2.2023 தேதி மாவட்ட முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இணையத்தை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை வழிமுறைகளை பற்றி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.