திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து நடத்தும் இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.குணசுந்தரி அவர்கள் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா