கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து செல்போனை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் தேவையில்லாத செயல்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது எனவும், ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற Link யை Open செய்ய கூடாது ஆகிய இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.