வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று 17.02.2023 நண்பகல் 15.30 மணிக்கு வேலூர், சத்துவாச்சாரி அடுத்த பொய்கை பகுதியில் அமைந்துள்ள Freedom Concept School ல் பயிலும் மாணவர்கள் சுமார் 200 நபர்களுக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான , ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, , கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், எண்ம நாணயம் (Cryptocurrency) மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.