கோவை : கோவையில் பல பெண்களிடம் இணைய மோசடியில் ஈடுபட்ட நபரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய ப்ரொபைல் புகைப்படமாக வைத்து பல நாட்களாக பல பெண்களிடம் அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதனை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறி அவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெறுவது வழக்கமாகக் கொண்ட குற்றவாளி பரமசிவம் வடக்கு கார் தெரு, கூமாபட்டி விருதுநகர், மேற்படி குற்றவாளியை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண், தலைமையில், காவல்துறையினர் குற்றவாளியை தொழில்நுட்ப உதவியுடன் பின் தொடர்ந்து இன்று கைது செய்தனர்.