கோவை : கோவை மாநகர் இராமநாதபுரம் புளியகுளத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தில், பணிபுரியும் திரு. செல்வமணி என்பவர் (25.07.2022), ம் தேதி கொடுத்த புகாரில் தனக்கு Telegram மூலம் அஹமதாபாத்தை சேர்ந்த Karthik Panchal என்பவர் அறிமுகமாகி ஆன்லைனில் NST investment Software மூலம் பங்கு சந்தையில் Trade செய்வதன் மூலம் தினமும் இலாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியதன் பேரில் அவரை நம்பி ரூ.4,31,050/- பணத்தை முதலீடு செய்ததாகவும் பின்னர் அவரை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை தான் முழுமையாக ஏமாற்றப்பட்டு விட்டது என தெரிந்து கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மோசடி நபரின் வங்கி கணக்கினை முடக்கி மேற்படி மோசடி நபரின் வங்கி கணக்கிலிருந்து வாதியின் வங்கி கணக்கிற்கு ரூ. 4,31,050/- தொகை திரும்ப வரவு வைக்கப்பட்டது.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற Online மூலமாக வரும் Trading, Investment, Part time investment job போன்று ஆசை வார்த்தைகளை கூறி வரும் ஆன்லைன் வேலைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் வங்கியிலிருந்து பேசுவதாகவோ, அல்லது செல்போனிற்கு அனுப்பப்படும் LINK உடன் கூடிய மெசேஜ்களை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் OTP களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், அவ்வாறு ONLINE மூலம் மோசடியாக பணத்தை இழந்து விட்டால் (FINANCIAL FRUAD) உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930 ஐ விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.