திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42),என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது லோன் வாங்கி தருவதாக கூறி பழனிச்சாமியின் வங்கி கணக்கில், இருந்து ரூ.25,000/- பணத்தை மோசடி செய்தனர். இது தொடர்பாக பழனிச்சாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்ததின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.25,000/- பணத்தை மீட்டனர். இதையடுத்து இன்று (16.08.2022). திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் மனுதாரர் பழனிச்சாமி அவர்களிடம் ரூ.25,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா