பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன், CCW அவர்களின் தலைமையில் இன்று 11.08.2021-ம் தேதி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.கலா மற்றும் அவரது குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமம் மற்றும் கோனேரிபாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் பொது மக்களிடம் இணையதளத்தில் ஏற்படும் குற்றங்கள் குறித்தும்,
யாரேனும் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது வங்கி விபரம் மற்றும் கடவுச்சொல்லை கேட்பார்கள் அதனை நம்பி இணையதள கயவர்களிடம் உங்களது விபரங்களை பகிர்ந்து விடாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை