கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அருகே உள்ள ஆவலபள்ளி ஏரியில் நேற்று மாலை சுமார் (40), வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. தலை ,கால் ,கை .துண்டிக்கப்பட்ட நிலையில் மிகுந்து அந்த உடலை கண்ட பொதுமக்கள் காவல்துறையினக்கு தகவல் கொடுத்தனர். இந்த புகாரை குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் மற்றும் ஓசூர் ASP திரு.அரவிந்த் மற்றும் அட்கோ காவல் ஆய்வளர் திரு.தங்கவேல் மற்றும் போலீசார் வந்து ஏரியில் மிகுந்த உடலை மீட்டனர். அப்போது அந்த உடலில் இருந்த தலையை துண்டித்த கொலை செய்யப்பட்டதும். உடலில் ஆங்காங்கே வெட்டு காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் அந்த உடலை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தற்போது தலை, கை, கால்கள், தேடும் பணியில் 12 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்