திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம்- சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்கள் ரவி(46), சாந்தி(40) தம்பதியினர். காய்கறி வியாபாரிகளான இவர்களது மகள் பவித்ரா(23). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருநின்றவூரைச் சேர்ந்த அரவிந்தன் (23) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங் களில் கணவரை பிரிந்து, பெற் றோருடன் வசித்து வந்த பவித்ரா, கடந்த ஜூலை 15-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.இதனால், ரவி, சாந்தி தம்பதியினர் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் சாந்தி, சென்னை, கொரட்டூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார்.ஆகவே, வீட்டில் தனியாக இருந்த ரவி, நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து, பட்டாபிராம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்