திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் (திருவாரூர் நகராட்சி ஆணையர்) என்பவரிடம் கடந்த (04.12.2024) அன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் செந்தில் என்றும் துணைமுதல்வரின் நேர்முக உதவியாளர் என்றும், திருவாரூர் வந்துவிட்டு சென்னை செல்லும்போது கார் பழுதாகிவிட்டது என்று கூறி G-PAY மூலம் ரூ.5,000-மும், ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று ரூ.2500 என மொத்தம் ரூ.7,500 பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து மேலும் ரூ.2500 வேண்டும் என்றும், மொத்த தொகையாக ரூ.10,000/- திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கேட்கவே, தாமோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததில், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், சின்னமலைகுன்று, தெற்கு தெருவை சேர்ந்த வேலுசாமி மகன் சரவணகுமார் 31/2 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த திருவாரூர் மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பெற்று கொண்டு மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.