திருவள்ளூர்: சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார்துர்கா (24) இவர் பொன்னேரி அடுத்த ஏ. ரெட்டிபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் நேற்று மாலை இவருடன் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த பகவத் (17) தானே கிஷோர் துர்கா (17) பிரசாந்த் அரபால்( 17) ஆகிய மூன்று பேருடன் ஆரணி ஆற்றின் பெரிய மனோபுரம் அருகேயுள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் விஜய் குமார் துர்கா (24) அடித்து செல்லப்பட்டார். அருகில் உள்ளவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு அதிகாரி சம்பத் தலைமையில் தீயணைப்புத் துறையினர் தேடிவருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன் மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன்
ஆப் இந்தியா திருவள்ளூர்