சேலம் : சேலம் சங்ககிரி உட்கோட்டம், சங்ககிரி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஆறு வயது சிறுமியை செக்கான் வளவு கரிமேடு பகுதி சேர்ந்த சங்கர் (37) என்பவர் சிறுமி வீட்டிற்கு அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுமியின் நாக்கை கடித்த குற்றத்திற்காக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.வீரம்மாள் அவர்களால், வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கடந்த (5/2/2019) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் விரைவாக போற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வந்த நிலையில் (29/5/2023) ஆம் தேதி சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி சங்கர் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி.ஜெயந்தி அவர்களால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரி ஆன திருமதி.வளர்மதி சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்