சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD-DRIVE AGAINST DRUGS”–ன் தொடர்ச்சியாக, H6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 13.06.2021 அன்று வைத்தியநாதன் பாலம் அருகில் உள்ள பழைய கட்டிடத்திற்குள் சென்றபோது,
அங்கு சட்ட விரோதமாக கஞ்சா பெருமளவு மறைத்து வைத் திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பாலாஜி (எ) காக்கா தோப்பு பாலாஜி, (வ/41), பிராட்வே, அவரிடமிருந்து 24.3 கிலோ எடை கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.