சென்னை : சென்னை பெரவள்ளூர் காவல்துறையினர் , மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர், பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில், இன்று காலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் ஒரிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் பீர் (35), மற்றும் மன்வீர் பீர் (25), என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் விசாரணையில் அம்பத்தூர் மண்ணூர்பேட்டை பகுதியை சேர்ந்த அர்ஜுன் தாஸ் (35), என்ற நபர் 5 ஆயிரம் கூகுள் பே மூலம் பணம் அனுப்பி, ஒரிசாவில் இருந்து கஞ்சாவை எடுத்து வர சொன்னது தெரிய வந்தது. இதனையடுத்து அர்ஜுன் தாசையும் காவல்துறையினர், கைதுசெய்தனர்.