மதுரை : மதுரை மாவட்டம், மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மழை நீர் தேங்குவதால் சுகாதாரகேடு நடவடிக்கை எடுக்க பாஜக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையான காளியம்மன் கோவில் அருகில் 20 வருடங்களுக்கு மேலாக மழை காலங்களில் தொடர்ச்சியாக சிறிதளவு மழை பெய்தாலும் கூட நீர் தேங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, கொசு மற்றும் தொற்று வியாதிகள் எளிதில் வரவும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது, காளியம்மன் கோவில் எதிர்புறம் சிமெண்ட் கல் சாலை அதாவது பேவர் பிளாக் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிக்கு அளவையானது ரோட்டில் இருந்து நாடக மேடை வரை அளவை செய்யப்பட்டது. ஆனால், அதைவிட குறைவான அளவில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இது தவிர, காளியம்மன் கோவில் முன்பாக கழிவு நீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிமெண்ட் கல் சாலையானது ரோட்டில் இருந்து ஒரே மாதிரியாக நாடக மேடை வரை அமைக்க வேண்டும் என, மேலக்கால் பாஜக சார்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, சோழவந்தானில் மாரியம்மன் அருகே மழைகாலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல், சாலையிலே குளம் போல தேங்கியுள்ளன. இப்பகுதியில், சோழவந்தான் பேரூராட்சித் நிர்வாகம் வடிகால் வசதியை மேம்படுத்த இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி