திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட எஸ் பி அரவிந்தன் அவர்கள் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சசிகுமார், ஆரணி பயிற்சி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் துணை ராணுவ அசிஸ்டண்ட் கமாண்டர் அசோக்குமார் உடன் துணை இராணுவ வீரார்கள் 80 பேர் ஆயுதப் படையை ஆண் பெண் சேர்ந்த 60 வீரர்கள் உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார், மகேந்திரன், வெங்கடேசன் உடன் இருந்தனர்.மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் வாக்களிக்களித்து வீடு செல்லும் வரை நாங்கள் பாதுகாப்பாக உங்களுக்கு இருக்கிறோம் என்று காவல்துறையும் துணை இராணுவப் படை ஆயுதப்படை வீரர்கள் இருக்கின்றோம் என கூறி முக்கிய வீதிகள் வழியாக துப்பாக்கி ஏந்தி கொடி அணி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது இதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்