திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தல்படி ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து 12.01.2025 அன்று, காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் சாந்தாராம், (கிழக்கு) தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் துணை ஆணையர்கள் சிறப்புரையாற்றி, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் மாநகர காவல் உதவி ஆணையர்கள், மாரிசாமி, (நுண்ணறிவு பிரிவு) சரவணன்,(மேலப்பாளையம்) கணேசன், (நிலஅபகரிப்புபிரிவு) ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள், செந்தாமரை கண்ணன், மகேஸ்வரி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்