சேலம் : சேலம் மாவட்ட காவல்துறையினர் பயன்படுத்திய 6 காலாவதி நான்கு சக்கர
வாகனங்கள் (16.05.2023)- ந்தேதி குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்
விடப்படும். அந்த வாகனங்களை வரும் (14.05.2023)-ந் தேதி காலை 10.00 மணி
முதல் பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் நான்கு சக்கர வாகனத்திற்கு
5000 ரூபாயை (15.05.2023), -ந் தேதி மாலை 05.00 மணிக்குள் குமாரசாமிப்பட்டி
மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்தில் தொகையை செலுத்தி
டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே
ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்ததும் அதற்கான
தொகையை ஜி.எஸ்.டி.யுடன் செலுத்தி வாகனத்தை அப்போதே பெற்றுக்கொள்ள
வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலக
எண் 9498167389 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
வாகனங்களின் விபரங்கள் :1. TATA SPACIO, 2. TEMPO TRAVELLER, 3.TRAX, 4. MAHINDRA MINI BUS, 5. JEEEP, 6. CRANE, மேலும் சேலம் மாவட்ட காவல்துறையினர் பயன்படுத்திய 13 பழைய காவல்
வாகனங்களை பழுது நீக்கம் செய்து பழைய உதிரி பாகங்கள் சேலம் மாவட்ட
ஆயுதப்படை வாகனப்பிரிவு சேகரித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த உதிரி
பாகங்களை (16.05.2023)-ந் தேதி குமாரசாமிப்படட்டி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்
விடப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலக
எண் 9498167389 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.இரா.சிவக்குமார் இ.கா.ப
அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்