திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆயுதப் படையை (15.08.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து ஆயுதப்படை வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு இயற்கை வளத்தை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் ஆயுதப்படை காவலர்களுக்கு பணியின் போது விழிப்புடன் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.