மதுரை: மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னணு நூலகத்தை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர், திருமதி. N. காமினி இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.V.பாஸ்கரன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், அவர்களது குழந்தைகள், குடும்பத்தார் அனைவரும் கலந்து கொண்டு
விழாவினை சிறப்பித்தார்கள்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி