தேனி : தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.D.இளமாறன், அவர்கள் மேற்பார்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.K.செந்தில்குமார், மற்றும் வாகன பிரிவு காவல் ஆய்வாளர் திரு.S.ஜெயச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 45 நபர்கள் இரத்த தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கிய காவல்துறையினருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரத்த தானம் வழங்கிய காவல்துறையினர், ஊர்க்காவல் படையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

















