கோவை : உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு V. பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர காவல் துறையும் மற்றும் உலக சமுதாய சேவா சங்கமும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கமும் இணைந்து யோகா பயிற்சி நடத்தினர். இந்த பயிற்சியில் ஆயுதப்படை, தாலுகா காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள், பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் உட்பட 650 க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் ஆணையாளர் அவர்கள் யோகா பயிற்சியின் பலன்களை பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடினார் இப்யிற்சியில் காவல் பயிற்சி பள்ளி முதல்வர் சிட்ரிக் இமானுவேல் அவர்களும் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் திரு A.சேகர் அவர்களும் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்