கடலூர் : தேசிய மூத்தோர்; தடகள ஓட்டப்பந்தயம் 2023, மேற்கு வங்காளம் கல்கத்தா நகரில் உள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் (14.2.2023) முதல் (18.2.2023) வரை நடைபெற்றது. கடலூர் ஆயுதப்படை முதல் நிலை பெண்காவலர் திருமதி.A. சத்யா அவர்கள் தமிழக தடகள அணி சார்பில் 4*100 தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாம் பரிசை பெற்றார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் தேசிய மூத்தோர் தடகள போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் திருமதி. A. சத்யா அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.