தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை தற்காலிக பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 113 பெண் காவலர்கள் (03.05.2020) அன்று அறிக்கை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ப.இராஜன் MA, BL அவர்கள் பயிற்சி காவலர்கள் தங்குவதற்கான இட வசதி, குடிநீர் வசதி, உணவு விடுதி போன்றவற்றை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் திரு.சொக்கையா மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன் அவர்கள் இருந்தனர்.