தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் அலுவலகங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி இன்று தூய்மைப்படுத்தும் பணி – ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற காவல்துறையினரின் தூய்மைப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள், ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், நிலைய பொறுப்பு அதிகாரிகள் உட்பட காவல்துறை ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் (10.09.2022) காவல்துறையினரின் தூய்மைப்பணி நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று கொண்டிருந்த தூய்மைபடுத்தும் பணிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், நமது வீட்டை நாம் சுத்தமாக வைத்திருந்தாலே நமது சுற்றுபுறங்களும் தூய்மையாகிவிடும். அதே போல் நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சுற்றுபுறங்களில், மரங்கள் வளர்க்க வேண்டும்.
மேலும் பிரச்சினைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் தீர்வு என்பது தற்கொலை அல்ல. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மன தையரியத்தோடு அணுக வேண்டும். தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்பது குறித்து நீங்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘எண்ணம்போல் வாழ்க்கை” எனவே நீங்கள் நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு நன்மைகளை செய்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா அமைதியான மாவட்டமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு தந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி தனது உரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நிறைவு செய்தார்.
இந்நிகழ்வின்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.