திருச்சி : திருச்சி மாநகரில் 04.01.2021அன்று திரு. R அருண்குமார், ஆயுதப்படை காவலர் 377, அவர் பணி முடித்து உறையூர், GH வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த வாகன திருடர்களை விரட்டி துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து உறையூர் காவல் நிலைய குற்ற எண் 141/21 U/s 379 IPC என்ற வழக்கில் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார். காவலரின் இந்த மெச்சத் தகுந்த பணியை பாராட்டி திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதியும் வழங்கினார்கள்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்