தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. T.P..சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் நேரடி கண்காணிப்பில் 22.03.2024 இன்று குற்றாலம், காசிமேஜர்புரம், வல்லம் மற்றும் இலஞ்சி ஆகிய பகுதிகளில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களின் முன்னிலையில் RPF வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.