கரூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V .பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் உத்தரவின்படி, திருச்சி சரக காவல் துறை துணை தலைவர்
திரு.A. சரவணசுந்தர் I. P. S., அவர்களின் வழிகாட்டுதலின் படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சுந்தர வடிவேல் அவர்கள் மேற்பார்வையில்
கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 08.12.2021 இன்று கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதாஞ்சலி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. அம்சவேணி அவர்கள் விளக்கப்படங்கள் மூலம் ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றங்களின் வகைகள் அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பண இழப்புகள் குறித்தும், எவ்வாறு முன்னெச்சரிக்கையாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.