திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் இன்று(10.07.2021) மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிசில் அவர்கள் தலைமையில் ஆயுதப்படை ஆய்வாளர் திரு. டேனியல் கிருபாகரன் அவர்கள் முன்னிலையில் ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் வாழும் கலை யோகா அமைப்பின் பயிற்சியாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் மூலம் காவல்துறையினருக்கு
தியான பயிற்சி, மூச்சு பயிற்சி,ஆசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பயிற்சியின் இறுதியில் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி சிறப்பாக பணி செய்யும்படி ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நிறை குறைகளையும் கேட்டறிந்து, காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேற்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள T-Shirt மற்றும் Shoes ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.
இப்பயிற்சியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.