திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (18.09.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, அரசு காவலர் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்கள். மேலும், ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வரும் காவலர் உணவகத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். ஆய்வின் போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.P.மணிகண்டன் அவர்கள் உடனிருந்தார்கள்.