திருவாரூர்: திருவாரூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் (16-8-2025) அன்று பாஸ்கர் த. பெ பாலகிருஷ்ணன் என்பவர் இரவு பணி முடித்து செல்லும் போது அவரது பின்னால் சென்று. மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் கொலை முயற்சி செய்து மேலும் இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆயுதத்துடன் சுற்றி திரிந்த திருவாரூர் பொதக்குடி பகுதியை சேர்ந்த அமீது நாதர் மகன் முகமது நிசார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கொலை அடிதடி மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
: