தஞ்சை: கும்பகோணம் மேற்கு காவல் நிலைய சரகம், பாத்திமாபுரத்தில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ்(H.S. No 287/03) என்பவர் வீட்டில் கடந்த (05-07-2024) அன்று நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் சோதனை செய்தபோது, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய குற்ற எண். 333/24 u/s 296(b), 127(2), 118(1), 109, 351(3) BNS-2023 கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்து நான்கு குற்றவாளிகளை பயங்கரமான ஆயுதங்களுடன் கைது செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய குற்ற எண்.335/24 ச/பி.132, 249(b) BNS 2023& 27(2) Arms Act-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி அலெக்ஸ் தப்பிய ஓடிய நிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் ராவத், இ .கா .ப அவர்களின் உத்தரவுப்படி கும்பகோணம் துணை கண்காணிப்பாளர் திரு. G. கீர்த்தி வாசன் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. P. ஜெகதீசன் மற்றும் கும்பகோணம் உட்கட்ட குற்ற தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. S.கீர்த்தி வாசன் தலைமையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கும்பகோண உழவர் சந்தை அருகே பதுங்கியிருந்த அலெக்ஸை கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கில் அடைக்கலம் கொடுத்தும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்