திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (28.01.2026) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, காவல் உதவி ஆய்வாளர் திருமதி ராணி அவர்களின் தலைமையில் ஆம்பூர் Future Senior Secondary பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், POCSO சட்டம், குழந்தை திருமண தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், அவசர உதவி எண்கள் மற்றும் Kaaval Udhavi App குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு காவல் துறையின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதையும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே சட்ட அறிவும், சமூகப் பொறுப்புணர்வும் மேம்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
















