திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் (05.03.2026) எஸ்.ஜே.எச்.ஆர் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின் தலைமையில் ஆம்பூர் உமராபாத் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் Kaaval Udhavi App பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















