பெரம்பலூர்: கரோனா ஊரடங்கு நாளை (10ம்தேதி) முதல் அமல்படுத்தப்படுவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்றும்,இன்றும் புறப்பட்டனர். அப்போது அதிகளவிலான பயணிகள் தனியார் ஆம்னி பஸ்களில் சென்றனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது
போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், பெரியசாமி மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த ஆம்னி பஸ்களை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது அப்போது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 10 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பஸ் வாகன வரி செலுத்தாது தெரியவந்ததையடுத்து அந்த பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ. ஒரு லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.