மதுரை : மதுரை மாநகர் அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட 80 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜ்குமார் என்பவர் நிறுவனத்தில் ஆடிட்டிங் செய்யும்போது ரீபிளேஸ்மெண்டிற்கு வந்திருந்த 35 புதிய ஆப்பிள் ஐ போன்களை பரிசோதித்து பார்த்தபோது 35 ஆப்பிள் ஐ போன்கள் இருந்த செல்போன் ஃபாக்ஸ்களில் செல்போன்களுக்கு பதிலாக பழைய செல்போன்களுக்கு உரிய பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது.
செல்போன்களின் மதிப்பு 21,11,480/ -ரூபாய் என்றும் 35 ஆப்பிள் ஐ போன்களை திருடிச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜ்குமார் கொடுத்த புகாரை பெற்று திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் எதிரியை விரைவில் கைது செய்யும்படி காவல் துணை ஆணையர் குற்றம் திரு. பழனிகுமார் அவர்கள் உத்தரவிட்டார்கள். அவர்கள் உத்தரவுப்படி அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. வினோஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. செந்தில் குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பன்னீர்செல்வம், தலைமை காவலர் 1154 திரு.கணேசபாண்டி மற்றும் முதல் நிலை காவலர் 1565 திரு.வெங்கட்ராமன், முதல் நிலை காவலர் 1001 திரு.முத்துகுமார் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரியை தேடி வந்தனர்.
நேற்று 21.12.2020 – ம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி மனோஜ் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் ராஜ்குமார் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மனோஜும் பணிபுரிந்ததாகவும் அவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டைச் சேர்ந்த ஜோதி என்பவருடைய மகன் என்பதும் உறுதிசெய்யப்பட்டது பின்னர் அவரிடமிருந்து 34 ஆப்பிள் ஐ போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
தனிப்படையினரான காவல் ஆய்வாளர் உட்பட ஆறு நபர்களின் சிறந்த பணியை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.