வேலூர் : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் முனைவர் C. சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படியும் ஆபரேஷன் மறுவாழ்வு என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் தீவிர நடவடிக்கைகள் மூலம் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 28 நபர்களை மீட்டு மறுவாழ்வு இல்லத்திற்கும் குழந்தை காப்பத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்துஇது போன்ற பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்