கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து காவலர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.காதர் செரிப், முதல் நிலை காவலர் திரு. ராஜீ, காவலர் திரு.ஹேம்நாத்குமார் ஆகியோர்கள் உடனடியாக ஓட்டுநரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.















