விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் to பாலப்பட்டு நெடுஞ்சாலை ரோந்து எண் ஒன்றில் பணிபுரியும் காவலர்கள் கணபதி மற்றும் மாரிச்சாமி ஆகியோர் மேல்பட்டு அருகே கார் டயர் பஞ்சாரகி நின்றதை அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று வாகனத்தை ஓரங்கட்டி போக்குவரத்தை சீர் செய்து.
அருகில் மெக்கானிக் யாரும் இல்லாததால் காவலர்களே முன்வந்து பழுதாகி நின்ற காரின் டயரை மாற்றி கொடுத்து உதவி செய்தனர். தக்க சமயத்தில் உதவி செய்த காவலர்கள் திரு. கணபதி மற்றும் திரு. மாரிச்சாமிக்கு பொது மக்களின் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்கள் காவலர்களை வெகுவாக பாராட்டினார்.