தஞ்சை : தஞ்சை மாவட்டம், (16/02/23)- கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ்ராவத் I.P.Sஅவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு கைது செய்ய உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ்குமார் டிபிஎஸ் அவர்கள் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பேபி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில்,
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சீதா ஆகியோர் அடங்கிய தனி படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்தார்கள் அப்போது அந்த வீட்டில் வைத்து செல்போன் மூலமாக ஆன்லைன் விபச்சாரம் செய்து வந்த சோழபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் பெண்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரம்யா , முருக்கங்குடியைச் சேர்ந்த பிரேமி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து மேலும் அங்கு இருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் குடும்பம் நடத்துவது போல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு மாதகாலமாக ஆன்லைன் மூலமாக விபச்சாரம் செய்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து இவர்களிடமிருந்து ரூ.10,000 (பத்தாயிரம் ) பணம், மூன்று இருசக்கர வாகனங்கள் ,ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்தார்கள். மேற்படி நபர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவுபடி குற்றவாளிகளை சிறையில் அடைந்தனர் . பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்